Gaza | காசா மக்களுக்கு வானிலிருந்து விழுந்த அபாய லெட்டர்... கூட்டம் கூட்டமாக தெறித்து ஓடும் காட்சி

x

காசா மக்களுக்கு வானிலிருந்து விழுந்த அபாய லெட்டர்... கூட்டம் கூட்டமாக தெறித்து ஓடும் காட்சி

காசாவில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மத்திய காசாவில் இருந்து மக்கள் தங்கள் உடைமைகளுடன் வெளியேறத் தொடங்கியுள்ளனர். காசாவில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென துண்டு பிரசுரத்தை பறக்கவிட்டு இஸ்ரேல் ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். காசா நகரை நோக்கி இஸ்ரேலியப் படைகள் மற்றும் டாங்கிகள் நுழையும் காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. இந்நிலையில், மத்திய காசாவில் வசிக்கும் மக்கள், தங்கள் உடைமைகளுடன் கடற்கரை சாலை வழியாக, வாகனங்களில் தெற்கு நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்