Fire Accident | Karachi | கராச்சியில் திடீர் பயங்கர தீ.. உடல் கருகி 3 பேர் மரணம்
கராச்சி வணிக வளாகத்தில் தீ விபத்து - 3 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கராச்சி எம்.ஏ ஜின்னா சாலையில் உள்ள வணிக வளாகத்தில், கடை ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பற்றி மற்ற கடைகளுக்கு பரவியதாகவும், இதில் 7 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தீயணைப்பு பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. உயிரிழந்த 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
