ஆப்கானில் நிலநடுக்கம் - டெல்லியில் தெரிந்த அறிகுறி.. பீதியில் மக்கள்

x

அப்கானிஸ்தானில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்துகுஷ் மலைப்பகுதியில் அதிகாலை 4.43 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதனிடையே, டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. டெல்லி என்.சி.ஆர். பகுதியில், பொதுமக்கள் நில அதிர்வை உணர்ந்ததாக, எக்ஸ் தள பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்