எல்லையில் மோதிக்கொண்ட ராணுவங்கள்..11 பேர் பலி.. அதிர்ச்சியில் உலகநாடுகள்

x

தாய்லாந்து - கம்போடியா நாடுகளிடையே எல்லை பிரச்சினையால் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஐ கடந்துள்ளது. தாய்லாந்தின் சுரின் Surin மாகாணத்திற்கும், கம்போடியாவின் ஒட்டார் மீன்ச்சேக்கும் oddar Meanchey இடையே உள்ள எல்லையில், இரண்டு பழங்கால கோயில்கள் இருக்கும் பகுதியில் பயங்கர வன்முறை வெடித்தது. தொடர்ந்து எரிவாயு நிலையத்தில் கம்போடியா துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தாய்லாந்து ராணுவம் குற்றம்சாட்டியது.

இந்நிலையில், கம்போடியா நடத்திய தாக்குதலில், தங்கள் நாட்டில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாக தாய்லாந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்போடியாவின் அத்துமீறிய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என, தாய்லாந்து ராணுவம் கூறியுள்ளது. அதேசமயம், இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்