இரவில் கடற்கரைக்கு படையெடுத்த மக்கள் - ஏன் தெரியுமா? | Sea

x

பிரேசில் நாட்டில் கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. ரியோ டி ஜெனிரோவில் (RIO DE JANEIRO) மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை சுமார் 40 டிகிரி செல்சியஸை தொட்டுவிட்டது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் உஷ்ணத்தை தணிக்கவும், இதமான காற்று வாங்கவும், இரவிலும் கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிறுவர்கள் மற்றும் பெண்கள் கடலில் குளித்து உற்சாகமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்