நினைவுத்தூணை உடைத்தது ராணுவம்தான்; சிங்கள, தமிழ் தேசமாக இரண்டாகிவிட்டது - அடைக்கலநாதன் எம்.பி. குற்றச்சாட்டு

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை உடைக்க ராணுவத்தினரே காரணம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. அடைக்கலநாதன், பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
நினைவுத்தூணை உடைத்தது ராணுவம்தான்; சிங்கள, தமிழ் தேசமாக இரண்டாகிவிட்டது - அடைக்கலநாதன் எம்.பி. குற்றச்சாட்டு
Published on

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை உடைக்க ராணுவத்தினரே காரணம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. அடைக்கலநாதன், பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். நினைவுத்தூண் உடைக்கப்பட்ட இடத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுடைய மக்களின் துன்பங்களை நினைவு கூருகின்ற நினைவுத்தூபியான இந்த இடம் ஒரு புனிதமான இடமாக பார்க்கப்பட்டது என்றார். போலீசாரின் மேற்பார்வையில் நினைவுத்தூண் உடைக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இதன் மூலம், சிங்கள தேசம், தமிழ்த் தேசம் என இலங்கை இரண்டாகிவிட்டது என்பது எனக் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com