800 பேர் கோர பலி..``இதெல்லாம் ஆசீர்வாதம்’’ இரக்கமில்லாமல் பேசிய பாக்., அமைச்சர்

x

பாகிஸ்தானில் கொட்டி தீர்த்து வரும் கனமழைக்கு 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், வெள்ள நீரை ஆசீர்வாதமாக பார்க்க வேண்டும் என அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் குறிப்பாக கிழக்கு பாகிஸ்தான் பகுதி உருகுலைந்து போயுள்ள நிலையில், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் வெள்ள நீரை சேமிக்க வேண்டும் என்று ஆசிஃப் மக்களுக்கு அறிவுறுத்தி இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்