பாகிஸ்தானில் புயலில் சிக்கி பலியான 20 பேர் - பீதியில் மக்கள்
பாகிஸ்தானில் புழுதிப்புயல் மற்றும் கனமழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெய்த மழையால் ஏராளமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. லாகூரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Next Story
