``சாப்பிடுவதற்கே தகுதியற்றது..’’ மீன்களை பினாயில் ஊற்றி அழித்த அதிகாரிகள்

x

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பெரியகடைத் தெருவில் அமைந்துள்ள மீன் கடைகளில் ஆய்வில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் சுமார் 142 கிலோ மீன்கள் மற்றும் கருவாடுகளை பறிமுதல் செய்தனர். 5 மீன் கடைகளில், சாப்பிடுவதற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, ஆய்வில் ஈடுபட்டதாக கூறிய உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பறிமுதல் செய்த மீன்களை பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்