Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06-07-2025) | 7PM Headlines | Thanthi TV

x

தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...

இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவிப்பு...


17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக

பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி...ஆபரேஷன் சிந்தூரை மையப்படுத்தி நடத்தப்பட்ட பாரம்பரிய நடனத்துடன் பிரேசில் வாழ் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு...


தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற்று வரும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கம்...

திமுகவின் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்...


பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்படவில்லை என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தகவல்...

நாளை மறுநாள் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம்...


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆறாம் நாள் யாகசாலை நிகழ்ச்சி...

நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை ஒட்டி, வெகு விமரிசையாக நடைபெற்ற பூஜைகள்...


Next Story

மேலும் செய்திகள்