ரயிலில் வந்த இளைஞரின் பையை சோதித்த போலீஸ்க்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயிலில் வந்த இளைஞரின் பையை சோதித்த போலீஸ்க்கு காத்திருந்த அதிர்ச்சி
அடுத்தடுத்து சிக்கும் கஞ்சா மூட்டைகள்
ஆந்திராவில் இருந்து மீண்டும் ரயில்கள் மூலம் கடத்தல் அதிகரிப்பு
முழுவீச்சில் சோதனை மேற்கொண்டு கஞ்சா வேட்டையில் ரயில்வே போலீசார்
9.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்திய நபர் கைது
ஒடிசாவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் 9.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு மற்றும் பயணிகளின் உடைமை திருடு போவதை தடுக்கும் நோக்கில் வழக்கமான சோதனையை மேற்கொண்டு இருந்தனர்.
சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் கே.பி. செபாஸ்டியன் தலைமையில்
உதவி ஆய்வாளர் முகமது அஸ்லாம் தலைமை காவலர்கள் முத்துக்குமார்,கண்ணன் ராஜேஷ், ஆகியோர் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டு இருந்த பொது புவனேஸ்வர் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்(20849) சென்னை எழும்பூர் நடைமேடை எண் 7 -ல் காலை 8.00 மணிக்கு வந்து நின்றது.
அதிலிருந்து சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் நடந்து வந்தார் அவரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார் இதனால் சந்தேகமடைந்து, அவர் வைத்திருந்த ட்ராலி பையை திறக்கச் சொல்லினர்.
அதில் பழுப்பு நிற டேப்பினால் சுற்றப்பட்ட பத்து பண்டல் இருந்தது சந்தேகத்தினால் வெட்டி பார்த்தபோது அதில் உலர்ந்த பச்சை நிற கஞ்சாக்கள் காணப்பட்டன. இதன் மொத்த எடை 19 கிலோ இருந்தது இதன் மதிப்பு ₹.9,50,000 லட்சம் எனவும் கஞ்சா கடத்திய வந்தவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சின்கிபூர் மீதும் குமார் சேதி (30) கைது செய்தனர்
ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு கொண்டு கஞ்சா மற்றும் கஞ்சா கடத்திய நபர் தொடர்புடைய ஆவணங்களை, மேற்கொண்டு மேல் நடவடிக்கைக்காக அம்பத்தூர் அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
