ரேஷன் அரிசி மூட்டைகளை திருடிய பள்ளி தலைமை ஆசிரியர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

புதுச்சேரியில் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை பள்ளி ஆசிரியரே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
x

காரைக்காலில் நேரு நகர் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 100 மூட்டை ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்தன. விடுமுறை காரணமாக பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில் அரிசி மூட்டைகள் வண்டியில் ஏற்றப்படுவதாக புகைப்பட ஆதாரத்துடன் புகார்கள் வந்தன. அதன்பேரில் அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் அறை பூட்டப்பட்டு இருந்தது. அவருக்கு செல்போன் அழைப்பை எடுக்காத நிலையில், 12 மூட்டை ரேசன் அரிசி மாயமாகி இருந்தது உறுதியானது. பள்ளி தலைமை ஆசிரியரான விஜயகுமாரே அரிசி மூட்டைகளை திருடியது உறுதியான நிலையில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்