ஒரே இரவில் ஊரையே நாறடித்த இளைஞர்கள் - கொந்தளித்த மக்கள்

x

முட்டையை வீசி கொண்டாட்டம் - துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

திருச்சியில் இளைஞர்கள் சிலர் முட்டைகளை வீசி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

திருச்சி பாலக்கரை கீழ படையாட்சி தெருவில் இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒருவருக்கொருவர் முட்டையை வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி உள்ளது. ரகளையில் ஈடுபட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வளைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்