அர்ஜென்டினாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகன் பிரவீனுக்கு அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாணவர் மற்றும் பயிற்சியாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சால்வை, மாலை அணிவித்து கவுரவம் செய்தனர்.