வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலை

வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலை
Published on

சிலம்ப குழுவை நடத்தி வந்த இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாமல்லன் நகரைச் சேர்ந்தவர் அப்பு என்கிற அருண்.தனியார் சிலம்பக் குழுவை நடத்தி வந்த அப்பு கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ் ஸ்டேட்டஸில் இது தான் தனது கடைசி புகைப்படம் எனப் பதிவிட்டு அதன் பின்பாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும், தன்னுடைய சந்தோஷம் என்றும் நிலைத்து இல்லை எனக் கூறி இருக்கிறார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அப்புவை பல இடங்களில் தேடி இருக்கின்றனர். இந்த நிலையில் பாலாற்றுப் படுகையில் அப்பு தீக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com