Chennai | Eye Hospital | சென்னையில் உலகின் முதல் பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி மையம் திறப்பு
சென்னையில் உலகின் முதல் பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி மையம் திறப்பு
Chennai | Eye Hospital | சென்னையில் உலகின் முதல் பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி மையம் திறப்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், உலகின் முதல் பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி சிகிச்சை மையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். டாக்டர் அமர் அகர்வால் உருவாக்கிய இந்த நுண்ணிய அறுவை சிகிச்சை முறையால், இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளின் பார்வைத்திறன் மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கருவிழித் தழும்பு உள்ளிட்ட குறிப்பிட்ட பார்வைக் கோளாறுகளுக்கு, கருவிழி மாற்று சிகிச்சை இல்லாமல் மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சைக்கு கருவிழித் திசு தானம் தேவையில்லை என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
