நின்று கொண்டிருந்த லாரி நகர்ந்து வந்து மோதியதில் தொழிலாளி பலி

x

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தானாக நகர்ந்து வந்த வேனை நிறுத்த முயன்ற கூலி தொழிலாளி, உடல் நசுங்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுகுடிசை கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர், தான் வேலை பார்த்து வந்த குடோனை திறந்த போது உள்ளே நின்று கொண்டிருந்த லோடு வேன் நகர்ந்து வந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதனை நிறுத்த முயன்றும் பலன் இல்லாமல், சிவலிங்கம் வேனின் முன்பு நின்று அதனை நிறுத்த முயன்றார். ஆனால் வேகமாக நகர்ந்து வந்த வேன் மோதியதில், மற்றொரு வாகனத்திற்கு இடையே சிக்கி உடல் நசுங்கி, சிவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்