பெண் குழந்தை கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டம் - சிறப்பாக செயல்படுத்திய தமிழகத்துக்கு 2 விருதுகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பெண் குழந்தை கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டம் - சிறப்பாக செயல்படுத்திய தமிழகத்துக்கு 2 விருதுகள்
Published on
பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில், நடந்த தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மத்திய அரசின் பெண் குழந்தைகளுக்கான கல்வி, பாதுகாப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாநிலங்கள் வாரியாக தமிழகத்துக்கும், மாவட்ட வாரியாக திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் என மொத்தம் 2 விருதுகள் வழங்கினார். இந்த விருதுகளை தமிழக அரசின் சார்பில் அரசின் முதன்மை செயலாளர் மணிவாசனும், திருவண்ணாமலை சார்பில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியும் பெற்றுக்கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com