அனைவருக்கும் சமமான உயர்கல்வி வழங்கும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டுவருவதாக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் அன்பழகன், தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக திகழ்வதாக பாராட்டினார். தமிழகத்தில் 82 புதிய கல்லூரிகளும் ஆயிரத்து 606 புதிய பாடதிட்டங்களும் உயர்கல்வி துறையில் துவங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் அன்பழகன், இந்திய அளவில் பெண்கள் உயர்கல்வியின் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளதாக கூறினார்.