குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண் பக்தர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கோட்டுபக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி கோயிலில் 189 குருபூஜை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டு வழிபட்டனர். கடந்த ஆண்டு மண் சோறு சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் சுவாமிக்கு காவடி எடுத்தும், எடைக்கு எடை வெள்ளம் சர்க்கரை, காசு வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
