திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் நகைகளுடன் மாயம்

வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் நகைகளுடன் மாயம்
Published on
மன்னார்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், 30 பவுன் நகையுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஒவல்குடியை சேர்ந்த ரசிகா என்பவருக்கும், திருமக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த 4 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், ரசிகா, வீட்டில் இருந்த 30 சவரன் நகை, பாஸ்போர்ட் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரசிகாவை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com