ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் இருந்து, தவறி விழுந்த பெண் பலியான சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதறச்செய்துள்ளது. கோபால்பட்டியை அடுத்த வி.எஸ்.கோட்டை பகுதியை சேர்ந்தவர் 50 வயதான அமராவதி. இவர் தனது மகளை நேரில் சென்று பார்த்துவிட்டு, தனியார் பேருந்தில் பயணித்தார். அப்போது கணவாய்ப்பட்டி அருகே, ஓடும் பேருந்தில் இருந்து வெளியில் தவறி விழுந்த பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்