பெண் தற்கொலை - வரதட்சணை கொடுமை என குற்றச்சாட்டு
பெண் தற்கொலை - வரதட்சணை கொடுமை என குற்றச்சாட்டு
வரதட்சணை கேட்டு பெண் தூக்கிடப்பட்டு கொலை?
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை, வரதட்சணை கேட்டு கொலை செய்துவிட்டதாக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. தௌ்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் ரோகிணி. பி பார்ம் படித்துள்ள இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக லோகநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவரது கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வீட்டில் தூக்கிட்ட நிலையில் ரோகிணியின் உடல் மீட்கப்பட்டது. இந்த நிலையில், ரோகிணியின் பெற்றோர், லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். முறையான நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் உறுதியளித்த பின், போராட்டம் கைவிடப்பட்டது.
