ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த பெண் தற்கொலை

x

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில், ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த லாவண்யா என்ற பெண், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வேலைக்காக ஆன்லைன் மூலமாக ஏற்பாடு செய்த லாவண்யா, மும்பையில் பதிவாகிய அடையாளம் தெரியாத எண்ணிற்கு பணத்தை அனுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில் மோசடி என தெரியவரவே, மனமுடைந்த லாவண்யா, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது செல்போனை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்