Nilgiris | Wild Elephant | காப்பிதோட்டத்தில் விரட்டிய காட்டு யானை | தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்
காப்பிதோட்டத்தில் விரட்டிய காட்டு யானை | கீழே விழுந்த தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி உயிரிழப்பு நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. . தேவாலா அருகே கரியசோலை பகுதியில் உள்ள காப்பி தோட்டத்தில், 65 வயதான பாலசுப்பிரமணியம் சக தொழிலாளர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை, அவரை திடீரென துரத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாலசுப்பிரமணியத்தை யானை மீண்டும் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் உடலை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் மனித-விலங்கு மோதலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
