ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை...அதிர்ஷ்டவசமாக தப்பிய வனத்துறையினர்

பொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் வனத்துறையினர் வாகனத்தை, காட்டுயானை துரத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை...அதிர்ஷ்டவசமாக தப்பிய வனத்துறையினர்
Published on
பொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் வனத்துறையினர் வாகனத்தை, காட்டுயானை துரத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. பொள்ளாச்சி அருகே நவமலையில் கூலித்தொழிலாளி மற்றும் பள்ளி மாணவி என இரண்டு பேரை ஒற்றை காட்டுயானை ஒன்று மிதித்து கொன்றதை தொடர்ந்து அங்கு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஆழியாறில் இருந்து நவமலை செல்லும் பகுதியில் வனத்துறையினர் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒற்றை காட்டுயானை அவர்களது வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்தியது. வேகமாக காரை பின்னோக்கி இயக்கியதால், வனத்துறையினர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர். இந்த காட்சிகளை, வனத்துறை வீர‌ர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com