கார் மீது மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட காட்டெருமை - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

கொடைக்கானல் வத்தலக்குண்டு மலைச்சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் மீது காட்டெருமை மோதியது.

காட்டெருமை ஒன்று சாலையின் நடுவே குதித்து வலது பக்க வனப்பகுதிக்கு செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் முன் பக்கம் மீது மோதியதில் கார் கண்ணாடி சேதமடைந்தது. மோதிய காட்டெருமை சிறிது தூரம் தள்ளிச் சென்றாலும், உடனே எழுந்து மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

X

Thanthi TV
www.thanthitv.com