கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த காதல் ஜோடி, கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டது. இந்த நிலையில், இருவரும் அங்குள்ள சாய்பாபா கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். கணவனின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சை குத்தி இருப்பதை பார்த்த மனைவி சந்தேகம் அடைந்து, கணவனை கோயிலில் சத்தியம் செய்யச் சொல்லி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவனை, காதல் மனைவி அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.