"என்னை ஏன் அந்த ஹாஸ்பிடல்ல சேத்தீங்க... இப்ப எனக்கு காலே இல்ல - சிறுவன் கேக்குறான்"

x

திருவள்ளூரில், தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் 12 வயது கிஷோர் என்ற சிறுவனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சையின் போது கால் அகற்றப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள், தனியார்

மருத்துவமனையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்


Next Story

மேலும் செய்திகள்