``ஆசை யாரை விட்டது’’ மல்லிகைப் பூவை ரூ.10 லட்சத்திற்கு வாங்கி ஏமாந்த அப்பாவி

x

பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு ஆக்குவதாக மோசடி-2 பேர் கைது

தேனியில் பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு ஆக்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள T. கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சித்தார்த்தன் மற்றும் இவரது மகன் விசுவாமித்திரன் இருவரும் சேர்ந்து பணத்தை வைத்து பூஜை செய்தால் இரட்டிப்பு மடங்காக தருவதாக கூறி மதுரையை சேர்ந்த அழகர்சாமி என்பவரிடம் ஒன்பது லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டு, மல்லிகை பூ நிரப்பிய சூட்கேஸ் ஒன்றை கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இது குறித்து அழகர்சாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்