``யாரை மிஸ் பண்றீங்க'' - தந்தி டிவிக்கு நித்தியானந்தா சொன்ன சூப்பர் பதில்
பிடித்தமான உணவு குறித்து நித்தியானந்தாவிடம் கேட்டபோது, தனக்கு பிடித்தது இட்லி, அண்ணாமலையார் கோயில் தயிர் சாதம், புளியோதரை உள்ளிட்ட பிரசாதம் தான்... வேறு ஒன்றும் இல்லை என்று பதிலளித்தார். யாரை மிஸ் பண்றீங்க? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தனது வாழ்க்கைக்கு வேண்டியவற்றை அமைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தன்னை மிஸ் பண்ணும் பக்தர்களை மிஸ் பண்ணுவதாக அவர் தனது பாணியில் பதில் அளித்தார். ஜென் Z குழந்தைகளுக்கு நீங்கள் கூறும் அட்வைஸ் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த நித்தியானந்தா, அவர்களது மிகப்பெரிய பிரச்சனை அடிக்ஷன் என்றும், அடித்து வளர்க்கிற அப்பா, அம்மா இந்த காலத்தில் இல்லை என்றும் கூறினார்.அதிர்ஷ்டவசமாக தான் அந்த மாதிரியான சமூகத்தை, தான் பார்த்ததாக நித்தியானந்தா தெரிவித்தார்.
Next Story