"குடியரசு துணைத் தலைவர் தன்கருக்கு என்ன நடந்தது?"- கனிமொழி எழுப்பும் சந்தேகம்

x

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - கனிமொழி கேள்வி

ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இந்த நாடு தள்ளப்பட்டுள்ளதாக, தி.மு.க எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு டெல்லி செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, குடியரசு துணைத்தலைவராக இருந்த தங்கர் எதற்காக ராஜினாமா செய்தார்?... என்ன நடந்தது?...ஏன் மறுபடியும் ஒரு தேர்தல் போன்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, எடப்பாடி பழனிசாமியின் கனவு வெறும் கனவாகத்தான் போகும் என்று குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்