"வானிலை நிகழ்நேர தரவுகளை இனி பொதுமக்கள் பார்க்க முடியாது"
"வானிலை நிகழ்நேர தரவுகளை இனி பொதுமக்கள் பார்க்க முடியாது"
இந்திய வானிலை ஆய்வு மையம், நிகழ்நேர தரவுகளை பொதுப் பயன்பாட்டிலிருந்து முடக்கியுள்ளது.
இதுகுறித்து RTI மூலம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், இனி நிகழ்நேர தரவுகளை வானிலை துறை அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும் என்றும், பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என்றும் இந்திய வானிலை மையம் அதிர்ச்சிக்குரிய பதிலை வழங்கியுள்ளது. இதன் மூலம் நிகழ்நேர மழை அளவு, மழையின் தீவிரம், வெப்பநிலை, ஈரப்பதம் போன்ற தகவல்களை தனியார் வானிலை ஆய்வாளர்கள் மட்டுமின்றி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் அறிய முடியாத நிலை ஏற்படுகிறது.
இதன் தாக்கம், இயற்கை பேரிடர்களின் போது மிகவும் தீவிரமாக இருக்கக் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story
