``எங்களிடம் அதை வாங்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தல'' - ஜெய்சங்கர்
Minister Jai Shankar | ``எங்களிடம் அதை வாங்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தல'' - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி
இந்தியாவிடம் இருந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வாங்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆங்கில நாளேட்டின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அவர்,
இந்தியாவிடம் இருந்து எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் பிற நாடுகளுக்கு சிக்கல் இருந்தால், அதை வாங்க வேண்டாமென தெரிவித்தார்.
தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த ஜெய்சங்கர்,
பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையவில்லை என்றும், அதில் சில இடையூறு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நமது விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்களின் நலன் கருதி, வர்த்தகப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
