தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு எச்சரிக்கை.. மாற்று சான்றிதழ் மறுக்க கூடாது - நீதிபதி

தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு எச்சரிக்கை.. மாற்று சான்றிதழ் மறுக்க கூடாது - நீதிபதி
Published on

தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு எச்சரிக்கை.. மாற்று சான்றிதழ் மறுக்க கூடாது - நீதிபதி

கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனியார் பள்ளி கட்டணம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க பள்ளிகள் மறுப்பதாகவும், அதனால் மாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதாகவும் வாதிடப்பட்டது.கட்டண பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தனிப்பட்ட முறையில் சட்டப்படி தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி,எந்தஒரு காரணத்திற்காகவும் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவருக்கு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது என்றும் கூரினார்.மேலும் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்விதுறைக்கு உத்தரவிட்டார்.இறுதியாக மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிப்பதாக பள்ளிகளுக்கு எதிராக புகார் எழுந்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் எனவும் தனியார் சுயநிதி பள்ளிகளை நீதிபதி எச்சரித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com