TN Rain | அரசு பள்ளியில் திடீரென இடிந்து விழுந்த சுவர் - அதிர்ச்சி காட்சி
அரசு பள்ளியில் திடீரென இடிந்து விழுந்த சுவர் - அதிர்ச்சி காட்சி
TN Rain | அரசு பள்ளியில் திடீரென இடிந்து விழுந்த சுவர் - அதிர்ச்சி காட்சி
#Dharmapuri #tnrain #school #thanthitv
தருமபுரியில் பெய்த கனமழையால் அரசு பள்ளியின் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இலக்கியம்பட்டி அருகே உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர், நேற்று இரவு பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது. இதற்கிடையே, இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பாக மழைநீர் வெளியேற வழியின்றிக் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, தேங்கிய மழைநீரை அகற்றவும், இடிந்த சுற்றுச்சுவரைச் சீரமைக்கவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
