தகாத உறவை கண்டித்த மாமனார், மாமியாரை கொன்ற மருமகன்

விருதுநகர் அருகே தகாத உறவை கண்டித்த மாமனார், மாமியாரை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, தப்பி ஓடிய மருமகன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
தகாத உறவை கண்டித்த மாமனார், மாமியாரை கொன்ற மருமகன்
Published on
கீழச்சிம்பூர் கிராமத்தை சேர்ந்த கணேசும், வீரசோழனை கிராமத்தை சேர்ந்த முனீஸ்வரியும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கணேசுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதை அறிந்த, அவரது மாமனார், மாமியார், மருமகனை கண்டித்துள்ளனர். ஆத்திரம் அடைந்த கணேஷ், அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் மாமனார், மாமியாரை தாக்கி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில், பரமக்குடிநகர் காவல்நிலையத்தில் கொலையாளி கணேசன் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com