நிதி திரட்டி சொந்தமாக ஏரியை தூர்வாரும் கிராம மக்கள்...

பொதுமக்களே ஒன்று சேர்ந்து வீட்டுக்கு வீடு பணம் வசூல் செய்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிதி திரட்டி சொந்தமாக ஏரியை தூர்வாரும் கிராம மக்கள்...
Published on
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தில் 15 ஏக்கர் பரபரப்பளவில் மார்க்காய் ஏரி உள்ளது. முறையாக தூர் வாரப்படாததால் ஏரி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ஏரி முட்புதராக காட்சியளித்தது. ஏரியை தூர்வாரும்படி வேப்பூர் ஊராட்சிக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்களே ஒன்று சேர்ந்து வீட்டுக்கு வீடு பணம் வசூல் செய்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டுக்கு ஒருவரென புறப்பட்டு சென்று கடந்த 15 நாட்களாக ஏரியை சுத்தப்படுத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com