விக்ரம் - படத்திற்கு அனுமதி கோரிய கமல்ஹாசன் - அனுமதி மறுத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

விக்ரம் - படத்திற்கு அனுமதி கோரிய கமல்ஹாசன் - அனுமதி மறுத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
விக்ரம் - படத்திற்கு அனுமதி கோரிய கமல்ஹாசன் - அனுமதி மறுத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
Published on

விக்ரம் - படத்திற்கு அனுமதி கோரிய கமல்ஹாசன் - அனுமதி மறுத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை எழும்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் அருங்காட்சியத்தில் நடிகர் கமல்ஹாசன் படப்படிப்பு நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனுமதி மறுத்துள்ளார்.நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும், விக்ரம் படப்பிடிப்பிற்கு காவல் துறையினர் சிலர் பணம் பெற்று கொண்டு அனுமதி வழங்கியதாகவும் பின்னர் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி உலா வருகிறது.இது குறித்து விளக்கம் அளித்துள்ள காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முற்றிலும் தவறான தகவல் எனவும் வதந்தி எனவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். சென்னையில் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் கடந்த 24 முதல் 27 ஆம் தேதி வரை கமல்ஹாசன் படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com