தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.
தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி
Published on
திருச்சி, மருதாண்டகுறிச்சியில் உள்ள உறையூர் சார்பதிவாளர் அலுவலத்தில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில், ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த செக்கானூரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மாலை ஆறு மணி முதல் மதுரை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை பத்திர பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 71 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு 8.30 மணிக்கு தொடங்கிய சோதனை 10 மணி வரை நீடித்தது.
X

Thanthi TV
www.thanthitv.com