மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேக முறைகேடு தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி டி.வி.எஸ். நிறுவன தலைவரும், ஸ்ரீரங்க கோயில் நிர்வாக அறங்காவலருமான வேணு சீனிவாசன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தரப்பினர் வேணு சீனிவாசனை கைது செய்ய மாட்டோம் என உறுதி அளித்தது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.