VelloreWater | 35 நாளாக ஆறு போல் ஊருக்குள் ஓடும் நீர்.. "எல்லாருக்கும் நோய் வருது.."-குமுறும் மக்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே லட்சுமி கார்டன் பகுதியில் 35 நாட்களுக்கும் மேலாக, சாலையில் உபரி நீர் ஆறு போல் ஓடுவதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. வெளியேற்றப்பட்ட உபரி நீர் லட்சுமி கார்டன் பகுதியை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story
