பறவைகள் இல்லாத வேடந்தாங்கல் சரணாலயம்...

போதிய தண்ணீர் இல்லாததால் ஏரியில் தங்காத பறவைகள்.
பறவைகள் இல்லாத வேடந்தாங்கல் சரணாலயம்...
Published on

இரைக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு, வருகின்றன. இந்தாண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், ஏரியில் தண்ணீரும் இல்லை, பறவைகளும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆயிரம் முதல் ஆயிரத்து 500 பறவைகள் வந்தாலும், அவையும் ஏரியில் தண்ணீர் இல்லாததால் தங்காமல் திரும்பிச் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சரணாலயத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக வனத்துறை திறந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com