விபத்தில் சிக்கிய மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்

விபத்தில் சிக்கிய 10 வகுப்பு மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்
விபத்தில் சிக்கிய மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்
Published on
வேடசந்தூர் அருகே உள்ள விட்டல் நாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை தேர்வு எழுதிவிட்டு தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது, அரசு போக்குவரத்து பணிமனை அருகே எதிரே வந்த ஆம்னி வேன் மோதியதில் இடது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. திண்டுக்கல் தனியார் மருத்துமனயில் சேர்க்கப்பட்டு உடனடியாக கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், நேற்று ஆங்கிலம் இரண்டாவது தேர்வை பள்ளி வளாகத்தில், ஆம்புலன்சில் படுத்தவாறு தேர்வு எழுதியுள்ளார். கால் உடைந்து அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், பள்ளிக்கு தேர்வு எழுத வந்த மாணவரின்ஆர்வத்தை பார்த்து சக மாணவர்களும் ஆசிரியர்களும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com