பள்ளி கட்டடம் மீது சாய்ந்து விழுந்த மரம் : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்

வாணியம்பாடி அருகே பள்ளிக்கட்டடம் மீது பழமையான மரம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி கட்டடம் மீது சாய்ந்து விழுந்த மரம் : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்
Published on

ஆலங்காயம் அருகே உள்ள நிம்மியம்பட்டு அரசு பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று வகுப்பு நடைபெற்று கொண்டிருந்த போது, திடீரென பள்ளி கட்டடத்தின் மீது அருகில் இருந்து அரச மரம் ஒன்று சாய்ந்து விழுந்துள்ளது. இதில், கட்டடத்தின் மேல்தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், அச்சமடைந்த ஆசிரியர்களும், மாணவர்களும் உடனடியாக வெளியேறினர். தொடர்ந்து அந்த கட்டடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சாய்ந்து விழுந்த மரக்கிளையை ஊர் பொதுமக்கள் வெட்டி அகற்றினர். ஏற்கனவே இருந்த ஓட்டுக்கட்டடம் பழுதடைந்ததால், புதிய கட்டடத்தில் பள்ளி இயங்கி வந்த நிலையில், தற்போது அந்த கட்டடமும் சேதமடைந்திருப்பதால், மாணவர்கள் மைதானத்தில் இருந்து படிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com