வைகாசி திருவிழா - 10,000 பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
பழனி அருகே வைகாசி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் உள்ள காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவின் ஒரு பகுதியாக பூக்குண்டம் இறங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற விழாவில் 10 ஆயிரம் பக்தர்கள் கையில் தீச்சட்டி, கரும்பு தொட்டிலில் குழந்தை என பல்வேறு வகையில் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இதைத் தொடர்ந்து கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் நிகழ்வுகளும் நடைபெற்றது.
Next Story
