அரசு நில ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றவில்லை என்றால், ராணுவத்தை பயன்படுத்த கூட தயங்கப் போவதில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை அருகே, அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றவில்லை என்றால், ராணுவத்தை பயன்படுத்த கூட தயங்கப் போவதில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அரசு நில ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றவில்லை என்றால், ராணுவத்தை பயன்படுத்த கூட தயங்கப் போவதில்லை - சென்னை உயர் நீதிமன்றம்
Published on

* சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் உள்ள கரிக்காட்டு குப்பம், சுனாமி குடியிருப்பில், அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் ஜான்சி ராணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

* கடந்த 2018-ஆம் ஆண்டில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்றும்படி கரிக்காட்டு குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உத்தரவிட்டது.

* உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு நெருங்கிய நிலையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், அரசுக்கு எதிராக ஜான்சி ராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

* இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, நில ஆக்கிரமிப்பாளர்களால், மனுதாரரின் கணவர் தாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

* இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என தெரிவித்த நீதிபதிகள்,

தேவைப்பட்டால் ராணுவத்தை வரவழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட தயங்கப் போவதில்லை எனவும் எச்சரித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com