உச்சினி மாகாளியம்மன் கோவில் திருவிழா - மேளதாளத்துடன் முளைப்பாரி எடுத்த பெண்கள்

x

விமர்சையாக நடைபெற்ற உச்சினி மாகாளியம்மன் கோவில் திருவிழா

திருச்செந்தூரில் உச்சினி மாகாளியம்மன் கோவிலில், ஆடி முளைக்கொட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சி தினத்தில், அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளங்கள் முழங்க வடபத்திரகாளி, உச்சிமகாளியம்மன், முத்தாரம்மன் ஆகிய உருவங்களை வைத்த முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்