தீ வைத்து எரிக்கப்பட்ட டூவீலர்கள் | ஆம்புலன்ஸ் டிரைவர் சொன்ன அதிர்ச்சி காரணம்

x

டூ வீலர்களை எரித்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரண்டு இரு சக்கர வாகனங்கள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே. பேட்டை அருகே செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணிபுரியும் இரண்டு ஊழியர்களின், இரு சக்கர வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் தப்பியோடிய மர்மநபர்கள் மீது சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அங்கு பணி புரிந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கலையரசன் முன்பகை காரணமாக வாகனங்களை எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்