பாக். ராணுவ தளபதி முனீரை அழைத்து வெள்ளை மாளிகையில் விருந்து வைத்த டிரம்ப்.. பின்னணி என்ன?

x

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் சந்தித்து பேசியுள்ளார்.

அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் சந்தித்து பேசினார். முன்னதாக வெள்ளை மாளிகையில் உள்ள கேபினட் அறையில் அசீம் முனீருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விருந்து உபசரித்தார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய எல்லை பதட்டங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவத் தளபதி அமெரிக்காவுக்கு பயணம் செய்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்